என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய வீடுகள்"
- புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.
- இன்னும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் மாநகரில் பொதுவாக குறுகிய சாலைகளும், 3 அடிக்கும் குறைவான தெருக்களும் அதிகம் உள்ளன. அத்தகைய இடங்களில் உள்ள பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இயற்கைச் சீற்றங்களினால் இடிந்து விழும் சூழ்நிலையில் அவற்றை இடித்துவிட்டு புதிய கடைகள், வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி தருவதில்லை. மின் இணைப்பும் தருவதில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன.
எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு கேட்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வலியுறுத்தியும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, 18.11.2022 அன்று நகர்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநர், நாகர்கோவிலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர், நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர், இதுமற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அவ்வாறு உறுதி அளிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்னரும், மேல் நடவடிக்கை ஏதும் இல்லை.
இதுபற்றி சட்டமன்றக் கூட்டத் தொடரில் 11.4.2023 அன்று, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரான, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
அப்போது பதில் அளித்துப் பேசிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். உறுதி அளித்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை.
எனவே, நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ள திட்ட அனுமதி பிரச்சினைகளை சரிசெய்து, உடனடியாக கட்டிட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க விரிவான அரசாணையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இந்த அரசாணை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கும் பொருந்தும் படியான உத்தரவாக வெளியிட்டு ஒரு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொடைக்கானல் அருகே வாழைகிரியில் ஆதிவாசி குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
- ரூ.35 லட்சம் செலவில் 14 வீடுகள் கட்ட பூமி பூஜை போடப்பட்டது
கொடைக்கானல்:
கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான சாலையை ஒட்டி மலை கிராமமான வாழைகிரி உள்ளது. இங்கு 14 ஆதிவாசி குடும்பத்தினருக்கு சுமார் ரூ.35 லட்சம் செலவில் புதிய வீடுகள் கட்டுவதற்காக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட நக்சலைட் சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கொடைக்கானல் கால்டன் நட்சத்திர விடுதி பொது மேலாளர் ராஜ்குமார் என்பவர் முயற்சியில் வாழைகிரி என்ற இடத்தில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் நக்சலைட் சிறப்பு பிரிவு அலுவலர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது.
- 178 குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அருகிலேயே வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்,
- 178 குடும்பத்தினருக்கு புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் வீடுகளை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
சென்னை:
சென்னை தீவுத்திடல் அருகே கூவம் கரையோரம் சத்தியவாணி முத்துநகரில் 2092 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களை அங்கிருந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
இவர்களில் 1914 குடும்பத்தினருக்கு ஏற்கனவே பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறி விட்டனர்.
மீதமுள்ள 178 குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அருகிலேயே வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 178 குடும்பத்தினருக்கு புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதி-2 திட்டப்பகுதியில் வீடுகளை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இதன்பேரில் அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து 178 குடும்பத்தினரையும் கே.பி.பார்க் குடியிருப்பில் மறு குடியமர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேயர் பிரியா, தயாநிதி மாறன் எம்.பி., துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
178 குடும்பத்தினரும் உடனடியாக புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு பகுதிகளுக்கு மாறி செல்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 178 குடும்பங்களை சேர்ந்தவர்களில் பலர் இன்றே தங்களது வீடுகளை காலி செய்யும் பணியை மேற்கொண்டனர். தங்களது உடைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் சத்தியவாணி முத்து நகரில் இருந்து வெளியேறி புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்புக்கு சென்றனர். படிப்படியாக அனைத்து குடும்பத்தினரும் காலி செய்து வருவதாக தெரிவித்தனர்.
இருப்பினும் அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தீயணைப்பு வண்டிகளும் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்